Skip to content

காஷ்மீரில் இயல்பு நிலை: ஒரு வாரத்திற்கு பின் பள்ளிகள் திறப்பு

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தியதில் அந்த நாட்டின் உச்ச தலைவரான அயதுல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. காமேனி படுகொலையை கண்டித்து காஷ்மீரில் நடந்த தொடர் போராட்டங்கள் காரணமாக கடந்த ஒரு வாரமாக கல்வி நிறு வனங்கள் மூடப்பட்டு இருந்தன.

இந்நிலையில் காஷ்மீரில் உள்ள கல்வி நிறுவனங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிகள் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குளிர்கால விடுமுறைக்கு பிறகு கடந்த மாதம் 23-ந் தேதி மேல்நிலை பள்ளிகள் மற்றும் உயர்நிலை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், நடுநிலை மற்றும் தொடக்க பள்ளிகள் கடந்த 2-ந் தேதி மீண்டும் திறக்க திட்டமிடப் பட்டு இருந்தன. ஆனால் போராட்டங்கள் காரணமாக தாமதமாகின. இந்நிலையில் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.

error: Content is protected !!