அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி, மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி கலந்துகொண்டார். செந்துறை ஊராட்சி ஒன்றியம், செந்துறை ஊராட்சி, தளவாய் ஊராட்சி, ஈச்சங்காடு கிராமம், அயன்தத்தனூர்
ஊராட்சி, ஆர்.எஸ்.மாத்தூர் ஊராட்சி, அசாவீரன்குடிகாடு ஊராட்சி ஆகிய பகுதிகளில் வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, செந்துறை வட்டாட்சியர் வேலுமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்முருகன், ரவி, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.