நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
வரும் பிப்ரவரி மாதம் திருச்சியில் நாதக மாநாடு நடைபெறும். தவெக மாநாட்டில் இன்று அண்ணா எம்ஜிஆர் படம் வைத்தவர்கள் நாளை ஜெயலலிதா, எடப்பாடி படம் வைப்பார்களா, வேலை வெட்டி இல்லாதவர்கள் முதல்நாளே மாநாட்டுக்கு வந்து இருக்கிறார்கள். நாட்டில் நிறைய பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். மாநாட்டில் நோக்கம் வெற்றி அடைந்தால் சரிதான். அரசியலில் ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் அதில் விஜய் உறுதியாக இருக்க வேண்டும். அவரது நிலைப்பாட்டை வைத்து தான் அவர் தம்பியா , எதிர் பார்ட்டியா என்பதை முடிவு செய்ய முடியும் .தெருநாய்கள் இல்லை என்றால் எலிகள் பெருகும்,
இவ்வாறு அவர் கூறினார்.