நெல் மூட்டைகள் மழையில் நனைவதற்கு அதிகாரிகள் தான் காரணம் -திருச்சியில் நடந்த நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் பொதுக்குழு கூட்டத்தில் அச்சங்கத்தின் தலைவர் பேட்டி.
TNCSC ஒர்க்கர்ஸ் வாய்ஸ் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் நால் ரோடு அருகே தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் ஊழியர்களின் 2013 முதல் 2016 வரை தகுதிக்கான பட்டியலை தயார் செய்தும் பணி நிரந்தரம் செய்வது என்று அறிவித்திருந்த நிலையில் அதனை தமிழக அரசு காலதாமதம் செய்து வருகிறது அந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பட்டினி போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில தலைவர் சண்முகவேலு கூறும் போது..
நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் 800 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகிறது ஆனால் 6000 கோடி இழப்பீடு ஏற்பட வாய்ப்புள்ளது இதற்கு தொழிலாளர்கள் தான் காரணம் என அதிகாரிகள் கூறுகிறார்கள் அது தவறு . நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கான தார்பாய்கள் சாக்கு உள்ளிட்டவைகளை அதிகாரிகள் கொடுப்பதில்லை,
அவுட்சோர்சிங் முறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப பார்க்கின்றனர். இங்கு நியமிக்கக்கூடிய ஐஏஎஸ் அதிகாரிகள் சூழ்நிலையை பார்த்துவிட்டு இங்கிருந்து ஓடி விடுகிறார்கள் அதிகாரிகள் லஞ்சம் பெறுவது அதிகமாகியுள்ளது அனைத்து அதிகாரிகளும் லஞ்சம் பெறுகின்றனர். அரிசி கொள்முதலை திமுக அரசு தனியாருக்கு கொடுத்துள்ளது ஆனால் அவர்கள் இரண்டு ரூபாய்க்கு அரிசியை வாங்கி 34 ரூபாய்க்கு விற்பனை செய்து முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். தனியார் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கு அரசு விலை கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது இதனால் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாணிப கழக ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர் வரும் 24ஆம் தேதி சென்னையில் பட்டினி போராட்டம் நடத்துவது என கலந்த ஆலோசித்து வருகிறோம் என்றார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் கார்த்திகேயன்,மாநில இணை செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில பொருளாளர் சுரேஷ்குமார், திருச்சி மண்டல தலைவர் முத்துராமன், துணைத் தலைவர் விக்னேஷ், குமரன், ராஜா, துணை செயலாளர் ராஜன், பொருளாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.