திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தண்டபாணி கோயில் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, சிவராஜ் பேட்டை, போஸ்கோ நகர், உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் நீர்நிலை புறம்போக்கு வசித்து வருவதாக கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு பல்வேறு இடங்களில் நீர் நிலை பொதுப்பணி துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றினர்.
இந்த நிலையில் பொன்னியம்மன் கோவில் தெரு பகுதியில் திரும்பவும் அதே இடத்தில் அண்ணாதுரை என்பவர் கடைக்கட்டி ஆக்கிரமிப்பு செய்து இருந்தார் இது குறித்து

தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் நீர் நிலை பொது பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த கடையை இடித்து தள்ளினர்.
அண்ணாதுரை ஒரு நாள் கால அவகாசம் கொடுத்திருந்தால் நானே ஆக்கிரமிப்பை அகற்றி இருப்பேன் என அதிகாரியிடம் கூறி சலசலப்பை ஏற்படுத்தினர் இதன் காரணமாக அங்கு சிறிது பரபரப்பு காணப்பட்டது

