வெண்ணமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் விவகாரம்: போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் காலி இடத்திற்கு அறிவிப்பு பலகை வைத்து, இரண்டு வீட்டின் உரிமையாளர்கள் வாடகைதாரராக மாறுவதற்கு அனுமதி கடிதம் வழங்கியுள்ளனர்.
கரூர், வெண்ணமலை பாலசுப்பிரமணிய கோவிலுக்கு சொந்தமான பல நூறு ஏக்கர் நிலத்தினை பலரும் ஆக்கிரமித்து வணிக வளங்கள், வீடுகள் கட்டியதாக கூறி திருத்தொண்டர் அறக்கட்டளை

அறங்காவலர் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
இந்த நிலையில் வணிக வளாகங்கள், கடைகள்,வீடுகள் உள்ளிட்ட இடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று அறநிலையத்துறை அதிகாரிகள் 100க்கு மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்புடன் வெண்ணமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான ஒரு காலி இடத்திற்கு கோவிலுக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பின் பலகை வைத்தனர்.
அதனை தொடர்ந்து வீடுகளுக்கு அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நேரில் சென்று அவகாச நோட்டீஸ் வைத்திருந்தால் அதனை அலுவலகத்தில் காட்ட வேண்டும், இல்லையென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
குறிப்பாக இரண்டு வீட்டின் உரிமையாளர்கள் வாடகைதாரராக மாறுவதற்கு அனுமதி கடிதம் வழங்கி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

