கரூர் அருகே குடும்ப சூழ்நிலை காரணமாக வீட்டுக் கடன் தவணைகள் செலுத்ததால் வீட்டிற்கு சீல் வைத்த தனியார் நிறுவனம். குழந்தைகள் தேர்வு எழுத முடிவில்லை, சாப்பாட்டிற்கு வழியில்லை என பணத்தை திருப்பி செலுத்த கால அவகாசம் கேட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.
கரூர் மாவட்டம், கடவூர் அருகே ராஜலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி, ஜானகி தம்பதியினர் இவர்களுக்கு மூன்று பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை உள்ளது.
சொந்த ஊரில் சிறிய அளவிலான வீடு கட்டி குடும்பத்தோ

டு வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2020 ஆண்டு தனியார் (மகேந்திரா) கடன் வழங்கும் நிறுவனத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.
வட்டியை சரியான முறையில் கட்டி வந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் வேலையில்லாததாலும், குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வட்டி கட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனாவிற்கு பிறகு கடன் பெற்ற நிறுவனத்தில் சென்று கேட்ட பொழுது நீங்கள் மொத்தமாக பணத்தை கட்ட வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மூத்த மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் தற்போது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் பாலசுப்பிரமணி கூலி வேலைக்கு சென்ற நிலையில் குழந்தைகள் பள்ளிக்கு சென்ற நேரத்தில் கடன் வழங்கிய தனியார் (மகேந்திரா) நிறுவனம் ஊழியர்கள் வீட்டிற்கு சென்று சீல் வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த குழந்தைகள் பார்த்து அக்கப் பக்கத்திடம் கூறி தாய் மற்றும் தந்தைக்கு தகவல் கூறியுள்ளனர். வீட்டிற்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர்.
குழந்தைகளின் பள்ளி புத்தகங்கள், ஆடைகள், வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் உள்ளே வைத்துவிட்டு சீல் வைத்ததால் எங்கு தங்குவது, எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் கடந்த ஒரு வார காலமாக அப்பகுதியில் உள்ள மரத்தடியில் தங்கி வருகின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாங்கிய கடனை திருப்பித் தருவதாகவும், 1.80 ரூபாய் பணத்திற்கு அதிகளவு வட்டி போட்டு 5 லட்ச ரூபாய் கேட்பதாகவும், எங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும், குழந்தைகள் தேர்வு எழுத செல்லவில்லை, சாப்பாட்டிற்கும் வழி இல்லை என குடும்பத்துடன் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

