கோவை ஒண்டிப்புதூர், செந்தில் ஜனதா வீதியில் கலைவாணி. இவர் இன்று உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அதிகாலை 3.30 மணியளவில் வீட்டின் முன்பு கோலம் போட்டுகொண்டு இருந்த போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 15 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தங்க சங்கிலியில் இணைக்கப்பட்டு இருந்த மணிகள் மற்றும் டாலர்களும் சேர்ந்து 17
Video Player
00:00
00:00
சவரன் பறிபோனதாக பாதிக்கப்பட்டவர் வேதனை தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.