திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள பிரசிடெண்ட் ஹோட்டல் மற்றும் தங்கு விடுதி திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது இந்த ஹோட்டலில் 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள் இந்த ஹோட்டலில் கூட்டுவது சுத்தம் செய்வதற்காக ஐந்து க்கும் மேற்பட்ட வயதானவர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது .
இந்நிலையில். அரியலூர் மாவட்டம் கீழ ராமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி இவரது மனைவி ஜெயலட்சுமி,கூலி வேலை செய்து
தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி வந்தனர்.
இந்நிலையில்,கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நல குறைவால் பொன்னுச்சாமி இறந்து விடவே இவரது மனைவி 67 வயதுடைய ஜெயலட்சுமி அவரது கிராமத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளார் வயது முதிர்வு காரணமாக என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தபோது நேற்று காலை சமயபுரம் வந்த ஜெயலட்சுமி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவில் அருகாமையில் உள்ள கடைவீதி பகுதியில் பிரசிடெண்ட் ஹோட்டலில் சுத்தம் செய்யவும் பாத்திரம் கழுவுவது காய் நறுக்குவது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த பிரசிடெண்ட் ஹோட்டல் உரிமையாளர் மலர்கொடி வேலை செய்து கொண்டிருந்த மூதாட்டி ஜெயலட்சுமி என்னடி அங்கேயும் இங்கேயும் ஓடுற வாடி போடி என தரை குறைவாக பேசியது மட்டும் அல்லாமல் உனக்கு சம்பளம் கிடையாது ஹோட்டலை விட்டு வெளியே போடி என பேசியதால் ஆத்திரமடைந்த மூதாட்டி ஜெயலட்சுமி சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .