Skip to content

முதியவர் தற்கொலை- பேக்கரி பெண் ஊழியர் தற்கொலை-திருச்சி க்ரைம்

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள வெள்ளூர் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 60). இவரது மனைவி கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது இழப்பு குணசேகரனை பெரிதும் வாட்டியது. மனைவி மீது அளவற்ற பாசம் கொண்ட அவரால் மனைவியின் இழப்பை தாங்கிக்கொள்ள இயலவில்லை. இதனால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளானார். பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் கத்தியால் தனக்குத் தானே கழுத்தை அறுத்துக் கொண்டு மயங்கிடந்தார் உறவினர்கள் அவரை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் கழுத்தை அறுப்பதற்கு முன்பாக பூச்சிக்கொல்லி மருந்தையும் குடித்து இருப்பது தெரிய வந்தது.
பின்னர்உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு டாக்டர்கள் கடந்த நான்கு நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து அவரது மகன் பூபாலன் கொடுத்த புகாரின் அடிப்படையில் முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி திடீர் தற்கொலை
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள வடக்கு சித்தாம்பூர் குடித்தெரு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 55) இவர் கடந்த 10 ஆண்டுகளாக கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இருந்தபோதிலும் நோயின் பிடியிலிருந்து அவரால் மீள இயலவில்லை.
இதில் மனம் உடைந்த தங்கவேல் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார் பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு முசிறி அரசு மருத்துவமனை, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் தங்கவேல் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து அவரது மகன் குமரேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பேக்கரி பெண் ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி கிராப்பட்டி அன்பு நகர் பத்தாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் இவரது மகள் சந்தியா வயது 19 இவர் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலையில் வேலைக்கு செல்லவில்லை பெற்றோரிடம் தலை வலிப்பதாக கூறியுள்ளார் பின்னர் அவரது தாயார் தேவி அவருக்கு தலைவலி மாத்திரை வாங்கி கொடுத்துள்ளார் அதை சாப்பிட்டு ஓய்வு எடுக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்றார்
பின்னர் திரும்ப வந்து பார்த்தபோது சந்தியா வீட்டின் அருகில் தூக்கு போட்டு பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின்னர் இது பற்றி இடமுடைப்பட்டி புதூர் போலீசில் தகவல் கொடுத்தார் தகவல் அறிந்த போலீசார்
விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை இது பற்றி விசாரணை நடந்து வருகிறது
.


மோட்டார் சைக்கிள் திருடிய ரவுடி உள்பட 2 பேர் கைது

திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா தெரு பகுதியைச் சேர்ந்தவர் லியாகத் அலி(54). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரம் புறப்பட்டு சென்றார் அப்போது வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து ஊர் திரும்பினார் அப்போது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது இது பற்றி
லியாகத் அலி கே கே நகர் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி பதிவுகள் மூலம் விசாரணை மேற்கொண்டனர் இதில் பாலக்கரை முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் 24 பாலக்கரை பீமநகர் கூனி பஜார் சவேரியார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ஜேக்கப் ஸ்டீபன் 24 ஆகிய இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது பின்னர் இரண்டு பேரையும் கேகே நகர் போலீசார் கைது செய்தனர் கைதான மணிகண்டன் ரவுடி பட்டியலில் உள்ளார் பின்னர் திருட்டுப் போன மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது

error: Content is protected !!