சுதந்திர தின கொண்டாடங்கள் நாடு முழுவதும் கலைக்கட்டியுள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி வந்துவிட்டாலே பள்ளி மாணவர்களுக்கு குஷி ஆகிவிடும். தேசிய கொடி ஏற்பட்டு, கலை நிகழ்ச்சிகளுடன் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்படும் தினமாமும். எந்த விதமான வேற்றுமையின்றி, அனைவரும் சமம், சகோதரத்துவம் உள்ளிட்ட மகத்தான கருத்துகளை மாணவர்களுக்கு கற்பித்து, நம் நாட்டு சுதந்திர போராட்டத்தை நினைவுக்கூர்ந்து தியாகிகளுக்கு போற்றும் தினமாக சுதந்திர தினம் அமைகிறது. 4 நாட்கள் விடுமுறையால் ஆம்னி பஸ்களில் டிக்கெட் விற்பனை விறு விறுவென உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை டூ மதுரை வரை வழக்கமான கட்டணம் ரூ.600 முதல் 1200 வரை. சென்னை to கோவை -இன்றைய கட்டணம் 1560 முதல் 3000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் தனது சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக பண்டிகை நாட்களில் ஆம்னி பஸ் கட்டண உயர்வு என்பது இருந்து கொண்டே உள்ளது. ஆகையா ஆம்னி பஸ் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுளள்து. புகார் அளிக்க வேண்டிய 044-24749002, 044-26280445, 04426281611. இந்த நம்பருக்கு புகார் அளிக்கலாம்.