Skip to content

திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்- பரபரப்பு

சிவகாசி அருகே திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி காரால் பரபரப்பு நிலவியது. காரை ஓட்டுநர் ஆன் செய்ய முயனற் போது தீப்பற்றியது. ஆம்னி கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பானது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காரை விட்டு இறங்கியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீப்பற்றி எரிந்த காரை தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!