தொழில் நகரமான தமிழக கேரள எல்லை பகுதியான கோவையில் கேரள வாழ் மலையாள மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்நிலையில்,மலையாள மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோவையில் களை கட்டியது. கோயம்புத்தூர் மலையாள பண்பாட்டு மேடை சார்பாக நடைபெற்ற நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர்.அரங்கில் நடைபெற்ற இதில்,கேரளா மாநில முன்னாள் கல்வித்துறை அமைச்சர் ரவீந்தர்நாத் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்..
முன்னதாக கேரள மாநிலத்தின் கலாச்சார நடனங்கள் மேடையில் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பிரபல நடிகை
ரோகினி கலந்து கொண்டார்.. கேரள பாரம்பரிய உடையில் நிகழ்ச்சிக்கு வந்த அவர்,செண்டை மேள கலைஞர்களுடன் கலந்துரையாடினார்.. இதனை தொடர்ந்து மேடையில் பேசிய அவர்,ஓணம் பண்டிகை கேரள பாரம்பரிய கலாச்சாரங்களை அழியாமல் பாதுகாப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து அவர் நடன கலைஞர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டதோடு,
ஓணம் பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஓணம் சத்தியா எனும் உணவு விருந்தில் கலந்து கொண்டு உணவருந்தினார்..