Skip to content

வேலூர் அருகே அரசு பஸ் மீது கார் மோதி ஒருவர் பலி..

வேலூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அப்துல்லாபுரம் அருகே, சாலையோரம் பயணிகளை ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்புறம் அதிவேகமாக வந்த கார் ஒன்று பயங்கரமாக மோதியது.

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், நின்றுகொண்டிருந்த பேருந்தின் பின் பகுதியில் மோதி அப்பளம் போல் நொறுங்கியது. காரின் முன் பகுதி பேருந்துக்குள் சிக்கிக் கொண்டது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். காரில் இருந்த குழந்தைகள் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து நடந்தவுடன் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து காரணமாகத் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான கார் அகற்றப்பட்ட பிறகு போக்குவரத்து சீரானது.

வேலூர் தாலுகா போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். கார் ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்தாரா அல்லது கார் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

error: Content is protected !!