Skip to content

ரூ.3.80 லட்சத்துக்கு ஒரு மாத ஆண் குழந்தை விற்பனை

சென்னை காசிமேடு பவர் குப்பம் இரண்டாவது பிளாக் சேர்ந்த திலகவதி (25). இவரது கணவர் சகாயராஜ் இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வயதில் சர்வேஷ், ஏழு வயதில் பிரியா, இரண்டு வயதில் கிருத்திவிக் என மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் உள்ள அரசு மருத்துவமனையில் திலகவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் பிறந்த குழந்தையை விற்பனை செய்து விடலாம் என முடிவெடுத்து, தண்டையார்பேட்டை YMCA குப்பம் முதல் தெருவை சேர்ந்த பிரதீபாவிடம் கூறியுள்ளார்.

இதனை அடுத்து காசிமேடு காசிபுரம் பத்தாவது தெருவை சேர்ந்த வெண்ணிலா புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கௌசல்யா பிரதீபா ஆகிய மூவரும் குழந்தையை விற்பனை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சேலத்தில் கோவிலுக்கு சென்ற பொழுது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு வளர்த்துக் கொள்ள குழந்தை இருந்தால் கூறவும் என்று சொல்லி இருந்ததை அடுத்து அந்தப் பெண்ணிடம் தொடர்பு கொண்டு, கடந்த 14ஆம் தேதி டிசம்பர் மாதம் ஈரோட்டை சேர்ந்த பெண்ணை காசிமேடுக்கு வரவழைத்து, ஆண் குழந்தையை மூன்று லட்சத்தில் 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும், அந்த குழந்தையின் அம்மா திலகவதியிடம் 3 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு பிரதீபா 20 ஆயிரம் ரூபாய் வெண்ணிலா, கௌசல்யா ஆகிய இருவரும் தலா முப்பதாயிரம் ரூபாய் பணத்தையே பிரித்துக் கொண்டுள்ளனர். சம்பவம் குறித்து காசிமேடு காவல் ஆய்வாளர் வசந்தகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் நான்கு பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு வரவழைத்து உண்மைத்தன்மை குறித்து விசாரணைக்காக குழந்தைகள் நல பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!