Skip to content

மயங்கி விழுந்து ஒருவர் சாவு.. கட்டிட தொழிலாளி சாவு… திருச்சி க்ரைம்

மது குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் தற்கொலை 

தஞ்சை மாவட்டம் கீழவாசல் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது55) குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.  இந்த நிலையில் திருச்சி, எடமலை பட்டிபுதூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கடந்த நான்கு நாட்களாக குடியில் இருந்து விடுபட சிகிச்சை பெற்று வந்தார். மன உளைச்சலில் இருந்து வந்த குமார் நேற்று அவரது உறவினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து எடமலைப்பட்டி பதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டிட தொழிலாளி சாவு

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஞ்சம்பட்டி வீதியைச் சேர்ந்தவர் மருதநாயகம் (63) இவர் பொன்மலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று கட்டிட வேலை செய்து வந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். இதைபடுத்து உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருதநாயகம் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

மின்  தூக்கியில் தலைமுடி சிக்கி பெண் பலி

திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் . இவரது மனைவி சுமதி (வயது52) இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று சுமதி கழிவறைக்கு செல்ல மூன்றாவது மாடிக்கு மின் தூக்கியில்ல் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது தலைமுடி மின்தூக்கியின் கதவு பகுதியில் சிக்கி கொண்டது.  இதில் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயங்கி விழுந்து ஒருவர் சாவு

தென்காசி மாவட்டம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் குடியிருப்பவர் அருணாச்சலம் (வயது 46) இவர் திருச்சியில் வேலை செய்து வருகிறார். இவர் திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 9ந்தேதி இவர் தின்னூர் அருகே மயங்கிய நிலையில் கிடந்தார் அவரை உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து அருணாச்சலம் வரும் வழியிலேயே இருந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!