அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக காலையில் ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில் சேலத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஓபிஎஸ் அதிமுகவில் இடம் இல்லை என்று கூறியுள்ளார். சேலம் ஓமலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியில் கூறியதாவது.. ஓபிஎஸ்க்கு அதிமுகவில் இடமில்லை என்பது பொதுச்செயலாளர் முடிவு அல்ல, பொதுக்குழுவின் முடிவு. அதிமுக பொதுக்குழுவில் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். ஓபிஎஸ்-ஐ நான் நீக்கவில்லை.. நீக்கியது பொதுக்குழு. விஜய் சிறந்த நடிகர். ஆனால் சிறந்த அரசியல்வாதி அல்ல. ஓபிஎஸ் அதிமுக-பாஜக கூட்டணிக்கு வந்தால் சேர்ப்பீர்களா என்ற கேள்விக்கு ஈபிஎஸ் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

