தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனை பிரதமர் மோடி நாளை இரவு நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவில் மதுரை-போடி ரயில் பாதை மின்மயமாக்கல் உள்பட பல்வேறு நிறைவுற்ற பணிகளையும் தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் பிரதமரை சந்திக்க தூத்துக்குடியில் வரவேற்கவும், வழியனுப்பவும் அனுமதி கேட்டு ஓபிஎஸ் கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் வரவேற்பு, அல்லது வழியனுப்பு நிகழ்ச்சி ஏதாவது ஒன்றில் கலந்து கொள்வார் என தெரியவந்து உள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி , பிரதமர் மோடியை சந்திப்பாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
