திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு திருவண்ணாமலையில் மழை பெய்த நிலையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இன்று பவுர்ணமி என்பதால் கிரிவல பக்தர்கள் காலை முதல் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில் இன்று காலை முதல் டெல்டா மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.