Skip to content

தஞ்சை-திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நாளை மின்தடை

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து உதவி செயற்பொறியாளர் ராஜ மனோகரன் தெரிவித்துள்ளதாவது: திருக்காட்டுப்பள்ளி துணை மின்நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (மே 22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இதன்படி இங்கிருந்து மின் விநியோகம் பெறும் திருக்காட்டுப்பள்ளி, பழமார்நேரி, இளங்காடு, நேமம், ரெங்கநாதபுரம், செய்யமங்கலம், பாதிரக்குடி, அகரப்பேட்டை, கச்சமங்கலம், மாரநேரி, கடம்பன்குடி, மேகளத்தூர், கல்லணை, கோவிலடி, திருச்சினம்பூண்டி, சுக்காம்பார் பகுதியில் மின்விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
error: Content is protected !!