Skip to content

டெல்லியில் நாளை, இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ம் தேதி  தொடங்குகிறது. ஆகஸ்டு 21-ம் தேதிவரை இத்தொடர் நடக்கிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் கார்கேவின் வீட்டில் நாளை இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெறும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அழைப்பு வந்து உள்ளது. இதேபோல் மும்பையில் பேசிய சிவ சேனா எம்பி சஞ்சய் ராவத், இந்தியா கூட்டணியின் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. கே.சி.வேணுகோபாலிடம் இருந்து இது குறித்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ஜூலை 19ம் தேதி கூட்டம் நடைபெறும் என்றார்.

பீகார் சட்டமன்ற தேர்தல்,  ஆபரேசன் சிந்தூர்,  போன்ற முக்கிய பிரச்னைகள் குறித்து  நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள்  எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில்  ஆலோசிக்கப்பட உள்ளது.

 

error: Content is protected !!