காஷ்மீர் மாநிலம் பெஹல்ஹாமில் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி இந்திய சுற்றுலா பயணிகள் 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் துணை நிறுவனமான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் என்ற அமைப்பை சேர்ந்த 4 தீவிரவாதிகள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர். அவர்களை ராணுவமும், என்ஐஏ மற்றும் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணி அளவில் ஸ்ரீநகரில் இந்திய ராணுவம் மற்றும் என்ஐஏ இணைந்து நடத்திய ஆபரேசனில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் பெகல்ஹாம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் என தெரியவந்து உள்ளது. இதன் மூலம் பெகல்ஹாம் தாக்குதல் நடத்திய 4 பேரில் ஒருவன் இன்னும் கிடைக்கவில்லை.
பெகல்ஹாம் தாக்குதல் தொடர்பாக மக்களவையில் இன்று விவாதம் நடக்க உள்ள நிலையில் அதே தினத்தில் அவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்புடன் பேசப்படுகிறது.