Skip to content

ஆபரேசன் செந்தூரில் பயங்கரவாதி அசாரும் பலி

பஹல்காமில் 26 பேர் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக இந்தியா கடந்த  7ம் தேதி அதிகாலை நடத்திய  ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்   மொத்தம் 9 இடங்களில் நடத்தப்பட்டது.  இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்தியாவில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்ட   தீவிரவாதி முகமது  யூசுப் அசார்(கந்தகாருக்கு இந்திய விமானத்தை கடத்திய முக்கிய குற்றவாளி),  அவரது மைத்துனரும், தீவிரவாதிகள் முகாம் பொறுப்பாளருமான அபு ஜிண்டால்(முரித்கே லஷ்கர் இ தொய்பா பொறுப்பாளர்),  ஹபீஸ் முகமது ஜலீல்,  முகமது கசன்கான்,  அசாரின் இன்னொரு மைத்துனரும், இந்த தாக்குதலில் பலியாகி உள்ளார்.   மைத்துனர்கள் இருவரும் அசாரின்  சகோதரிகளின்  கணவன்கள்.

ஜிண்டால் உடல் அரசு பள்ளியில் வைக்கப்பட்டு அரசு மரியாதையுடன் இறுதிசடங்கு செய்யப்பட்டு உள்ளது.

இந்தியா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலில், பாகிஸ்தானுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோவிடம் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி இஷாக் தர் தொலைபேசி மூலம்   பேசியுள்ளார்.

அப்போது, இந்தியா மீது  தாக்குதலை நிறுத்துவது குறித்து பரிசீலிக்க தயார். எனவும் இந்தியா தாக்குதல் தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம் என்றும்  பேசியுள்ளார். மேலும், நாங்கள் பொறுமையை இழந்ததால் தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தியதாகவும் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி அமெரிக்காவிடம் சொல்லியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 

error: Content is protected !!