பாகிஸ்தானை சேர்ந்த போபட் (24) அவருடன் பெண் தோழி கவுரி (20) இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதியான குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்திற்குள் நேற்று நுழைந்தனர். அப்போது இருவரும் எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
கைதான இருவரும், தங்கள் பெற்றோர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் 23ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறியதாக கூறினர். அவர்கள் இருவரும் கட்ச் பகுதியில் உள்ள நிலப்பரப்பு வழியாக சர்வதேச எல்லையை தாண்டி வந்தனர். எல்லை தாண்டி வந்ததன் காரணமாக, இருவரையும் கைது செய்துள்ளோம். அவர்களிடம் அடையான ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. கைதான இருவரும் மீது விரிவான விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் இது இரண்டாவது கைது நடவடிக்கை ஆகும்.
இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

