திருச்சி- மதுரை பைபாஸ் சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில் பிரமாண்டமான, நவீன வசதிகளுடன், விமான நிலையம் போல ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒருங்கிணைந்த கலைஞர் பேருந்து முனையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பஸ்நிலையத்தை ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இன்று அந்த பஸ்நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது. அனைத்து பஸ்களும் பஞ்சப்பூர் பஸ் நிலையம் சென்றது.
இன்று காலையில் பஞ்சப்பூா் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்களை அமைச்சர் நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக புதிய பஸ் நிலையத்தில் இருந்து முதன்முதலாக பஸ்களை இயக்கிய டிரைவர், கண்டக்டர்களுக்கு அமைச்சர் நேரு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சரவணன், மேயர் அன்பழகன், மாநராட்சி ஆணையர் எல். மதுபாலன், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
புதிய பஸ்நிலைய சுற்றுப்பகுதிகளில் ஒப்பந்த ஊர்தி ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

