திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 9 ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார். இதையொட்டி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து அரசு விழா நடைபெறும் இடத்தையும் நேரில் பார்வையிட்டு, ஏற்பாடுகள் அனைத்தையும் சிறப்பாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்
அமைச்சருடன், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி ஆணையர் சரவணன், மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட இந்த ஆய்வுபணியில் பங்கேற்றனர்.