வனத்தசின்னப்பர், ஆரோக்கியமாதா, அந்தோனியார் திருவுருவ சிலைக்கு சமனசு மாலை போடப்பட்டது..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் புதுமை புனித அந்தோணி

யார் ஆலயத்தின் தேர்பவனி திருவிழா நடைபெற்றது.
புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா திருப்பலி பாடல்கள் வாசிக்கப்பட்டு, சிறப்பு திருப்பலி

நடைபெற்றது. இதில் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று நோய்நொடி இன்றி நீடூடிவாழ

சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
திருப்பலி வழிபாட்டில் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஏராளமான கிராமமக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து மின் அலங்கார தேர்பவனி, வானவேடிக்கை,

பேண்ட் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் தப்பாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வனத்தசின்னப்பர், ஆரோக்கியமாதா, அந்தோணியார் ஆகிய தேர்பவனிகளுக்கு சமனசு மாலை போடப்பட்டு, தேரானது பாபநாசத்தின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்தது.

இரவு முழுவதும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு உண்டான ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள்,

பஞ்சாயத்தார்கள் கிராமவாசிகள் செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் முருகவேலு தலைமையில், பாபநாசம் காவல் ஆய்வாளர் சகாயஅன்பரசு உட்பட போலீசார் செய்திருந்தனர்.

