Skip to content

கபிஸ்தலம் அருகே பருத்தி மறைமுக ஏலம்….

தஞ்சாவூர் விற்பனைக்குழு, கபிஸ்தலம் அருகே கீழக் கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைப் பெற்றது. பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலை வகித்தார். பருத்தி மறைமுக ஏலத்தில் கும்பகோணம், இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 2724 விவசாயிகள், சராசரி 4000 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம்,தேனி, திருப்பூர் உள்ளிட்டப் பகுதிகளைச் சார்ந்த 12 வணிகர்கள் ஏலத்தில் கலந்துக் கொண்டு அதிகப் பட்சம் குவிண்டாலுக்கு ரூ.6809, குறைந்தபட்சம் ரூ.5869, சராசரி ரூ.6439 என விலை நிர்ணயம் செய்தனர். பருத்தியின் சராசரி மதிப்பு 2.57 கோடி ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!