இன்று 17 10 2025 ஆம் தேதி காவல் கண்காணிப்பாளர் இருப்பு பாதை ராஜன் ஐபிஎஸ் -ன் உத்தரவின் பேரில் காவல்துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தியின் மேற்பார்வையில் திருச்சி இருப்புபாதை காவல் ஆய்வாளர் ஷீலா மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை திருச்சி காவலர்கள் இணைந்து தீபாவளி பண்டிகை முன்னிட்டு பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். மேலும் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றகூடிய பொருட்களை எடுத்துச் செல்கிறார்களா? என போலீசார் மோப்பநாய் உதவியுடன் திருச்சி ரயில்வே ஸ்டேசனில் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். மேலும் திருச்சி இருப்புப் பாதை ரயில்வே நடைமேடையில் பட்டாசை ரயிலில் எடுத்து சென்றால் ஏற்படும் ஆபத்து குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.
தீபாவளி பண்டிகை…திருச்சி ரயில்வே ஸ்டேசனில் போலீசார் தீவிர சோதனை
- by Authour

