Skip to content

பட்டாசு வெடிவிபத்தில் 89 பேர் காயம்: அமைச்சர் மா.சு தகவல்

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீபாவளி பண்டிகை பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ பயனாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, தீ விபத்து சிகிச்சை வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப் பணியாளர்களுடன் தேநீர் அருந்தி, இனிப்புகள் வழங்கி கலந்துரையாடினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தீ விபத்து சிகிச்சை வார்டு ஆய்வு – திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதலோடு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப் பணியாளர்களுடன் கலந்துரையாடி, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து செல்வது என்பது தொடர் வாடிக்கையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறோம். தமிழக முதல்வர் ஒவ்வொரு தீபாவளி முன்பாகவும் பாதுகாப்பற்ற முறைகளில் பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வும், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அரசின் பல்வேறு துறைகளின் எடுத்துரைக்க வேண்டும் என்றும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்

error: Content is protected !!