தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் தம்பிக்கோட்டை மேலக்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் கன்னியா மாச விசேஷ இஸ்திர வார ஹோம திருமஞ்சன விழா நடைபெற்றது புரட்டாசி திருமஞ்சன விழாவையொட்டி லாரன் கல்வி நிறுவனங்கள் தாளாளர் பாலசுப்பிரமணியன் அவர்கள் மண்டகப்படியை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவிலில் யாகம் வளர்க்கப்பட்டு யாகத்தில் ஹோமம் சாமான்கள் பழங்கள் வெண்ணைய் மற்றும் பட்டு வேஷ்டி பட்டத்தொண்டு ஹோமத்தில் போடப்பட்டு யாகம் வளர்த்து தீபா ஆராதனை நடைபெற்று கடம் புறப்பாடு நடைபெற்று திருக்கோவிலை சுற்றி வந்தது பின்னர்
சுவாமிக்கு 100 லிட்டர் பால் அபிஷேகம் 50 லிட்டர் தயிர் அபிஷேகம் தேன் அபிஷேகம் நெய் அபிஷேகம் பஞ்சாமிர்தம் அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் மலர்கள் அபிஷேகம் என 20க்கும் மேற்பட்ட அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் புனித தீர்த்த நீர் அபிஷேகம் நடைபெற்று தீபாரதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபா ஆராதனை நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் பின்னர் ஆலயத்தில் அனைவருக்கும் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது பக்தர்களுக்கு சிறப்பு பேருந்து மூலம் அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை போன்ற பகுதிக்கு பக்தர்கள் சென்றனர்