உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கொடுக்கப்படும் மனுக்களை பரிசீலனை செய்து முடிவு எடுப்பதற்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். பணிப்பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்
பணி நெருக்கடி கொடுக்கக் கூடாது என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலக வாயிலில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தற்போது காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தில் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட தாசில்தார் வரை கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டத்தில் பட்டுக்கோட்டை தாலுக்காவை சேர்ந்த பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்து காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அலுவலர்கள் கூறுகையில், எங்களைப் போன்ற
வருவாய்த்துறையைச் சேர்ந்த ஊழியர்களிலிருந்து அலுவலர்கள் வரை அனைவருக்கும் பணிப் பாதுகாப்பு வழங்குவதுடன் பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். விடுமுறை நாட்கள் மற்றும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பணி நெருக்கடி கொடுக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். அரசு உரிய தீர்வு காண வேண்டும். தவறும்பட்சத்தில் வரும் நடைபெற உள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் நாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என்றனர்.
