Skip to content

சாதி- மதத்தை கடந்து கிராம மக்கள் கொண்டாடிய மயிலம் தீபாவளி

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூர் கிராமத்தில் ஜாதி மத பேதங்களை கடந்து அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி தீபாவளிக்கு அடுத்த நாள் மயிலம் தீபாவளியை பாரம்பரியமாக கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராமத்தில் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். பொதுவாக தீபாவளி பண்டிகை என்பது வெறுமனே பட்டாசு மத்தாப்பு வெடிப்பதோடு இனிப்ப பலகாரங்களோடு நின்று விடாமல் கொங்கு மண்டல கிராமங்களில் கறி விருந்து உபசரிப்போடு கொண்டாட்டப்படுகிறது. வடசித்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 18 பட்டி கிராம மக்கள் ஒன்று கூடி இந்த மயிலம் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

குடும்ப சகிதமாக ராட்டினம் ஊஞ்சல் போன்ற விளையாட்டுக்கள் விளையாடியும், தீபாவளி பண்டிகையை கொண்டாடும் இந்துக்கள் அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களை தங்களது வீடுகளுக்கு அழைத்து விருந்து

வைத்தும் இனிப்பு பலகாரங்கள் வழங்கியும் வெளியூர்களில் வசிக்கும் குடும்ப உறவுகள் அனைவரை அழைத்து ஒன்று கூடி இந்த மயிலம் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.

இந்து முஸ்லிம் கிறிஸ்தவ என்ற பாகுபாடு இன்றி மதசார்பற்ற முறையில் இந்த விழாவை பாரம்பரியமாக கொண்டாடி வருவதாகவும் பொதுவாக கோவில் திருவிழாக்கள் என்றால் ஒவ்வொரு கமிட்டி அமைப்பார்கள் ஆனால் இந்த விழாவை பொருத்தவரை எந்தவித கமிட்டி கிலோ தலைமையோ இல்லாமல் கிராம மக்களாகவே
ஒன்று கூடி பரஸ்பரமாக சகோதர உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டும் வகையில் இந்த தீபாவளி கொண்டாடப்பட்டு வருவதாகவும் இந்தியாவில் எங்கும் இல்லாத ஒரு விழா இந்த மயிலம் தீபாவளி திருவிழா கோவில் திருவிழா என்றால் பக்தர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள். இந்த விழாவை பொருத்தவரை எவ்வித ஜாதி மத பாகுபாடு இன்றி ஒற்றுமையுடன் கொண்டாடுகிறோம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை மறந்து இந்த விழாவன்று அனைவரும் ஒன்று கூடுவோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!