திருச்சி கலெக்டர் சரவணனுக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அவற்றில் கூறியிருப்பதாவது.. ஆகாயத்தாமரையினால், நீர் ஆவியாவதைத் துரிதப்படுத்துவது மற்றும் நீர்நிலைகளில் உள்ள உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துகிறது. நீர் ஒட்டத்தைத் தடுப்பது போன்ற பல காரணத்தினால் நீர்நிலைகளில் அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் திருச்சி மாவட்டத்தில் பல இடங்களில் இதற்கான பணிகள் நடைப்பெறவில்லை. குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் பெரிய குளங்களில் ஒன்றான மாவடிக்குளம், உய்யக்கொண்டான் ஆறு, கொட்டப்பட்டு குளம் போன்ற பல குளங்கள், ஏரிகள் உள்ளது. எனவே நீர்களை பாதுக்காக்க திருச்சி மாவட்ட கலெக்டர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம், தண்ணீர் அமைப்பு மற்றும் பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று இவ்வாறு தெரிவித்துள்ளது.
மாவடிக்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்ற மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை
- by Authour

