பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே குற்றவாளிகளை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. இதில் காவலர்கள் விக்னேஷ்குமார், மாரிமுத்து பாண்டி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் 2 பேர் புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.
மதுரையில் பழிக்குப் பழியாக 22 ஆண்டுகளில் 21 கொலைகள் நடந்த நிலையில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. ரவுடி வௌ்ளை காளி மீது 8 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.

