பெரம்பலூரை அடுத்த நொச்சியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் மகன் விஷால், இவர் பெரம்பலூரிலுள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பாஸ்கர் தனது வயல் நிலத்தில் பூச்சி கொல்லி மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது தந்தைக்கு உதவி செய்ய தண்ணீர் எடுப்பதற்காக சிறுவன் விஷால் தங்கள் நிலத்திலுள்ள கிணற்றிற்கு சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினான். சிறுவன் விழுந்ததை அறிந்த அவனது தந்தை பாஸ்கர் அக்கம்பக்கத்தினரை அழைத்து கிணற்றில் இறங்கி காப்பாற்ற முயன்றும் சிறுவன் உயிரிழந்தான். சம்பவ இடத்திற்கு வந்த தீயைணப்புத்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.