தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (செப் 4, 2025) லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தந்தை பெரியாரின் உருவப்படத்தைத் திறந்து வைக்கிறார்.
மேலும், திராவிட இயக்கம் ஏற்படுத்திய சமூக மாற்றங்களை விளக்கி, “The Dravidian Pathway” w “The Cambridge Companion to Periyar” ஆகிய நூல்களையும் வெளியிட உள்ளார். இந்த நூல்கள் பெரியாரின் சீர்திருத்தங்கள், தத்துவம் மற்றும் சமூக மாற்றத்திற்கு அவரது பங்களிப்புகளை விளக்குவதாக அமைந்துள்ளன.
இந்த நிகழ்வு, பெரியாரின் பகுத்தறிவு மற்றும் சமூக நீதிக் கொள்கைகளை உலகளாவிய அளவில் அறிமுகப்படுத்துவதற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ள பெரியார் உருவப் படத்தை பிரபல இந்திய கலை வடிவமைப்பாளர் தோட்டா தரணி வரைந்துள்ளார்.
இந்திய நேரப்படி இன்று இரவு 10. 11 மணி வரை நடக்கும் நிகழ்வில் பெரியாரின் மரபு மற்றும் திராவிட சிந்தனையின் ஆழமான தாக்கம் குறித்து முதலமைச்சர் உரையாற்றுகிறார்.