கோவை , பொள்ளாச்சி அடுத்த ஏரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மரம்புடுங்கி கவுண்டனூர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் குடியிருப்புகளுக்கு மத்தியில் செல்போன் டவர் நிறுவப்பட்டுள்ளது அதில் இருந்து வெளிப்படும்
கதிர்வீச்சால் பாதிப்பு அதிகமாகிக் கொண்டிருப்பதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலர் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் ஒரு சிலர் இறந்தும் விட்டனர். இந்த கதிர்வீச்சால் புற்றுநோய் இரத்த சோகை, மாரடைப்பு, தூக்க மின்மை, தோல் வியாதி ஆகியவைகளால் அவதிப்படுகிறோம். ஒரு சில குடும்பங்கள் வீடுகளை காலி செய்து வேறு பகுதிக்கு குடி பெயர்ந்துள்ளார். இவ்விடத்தை விட்டு வெளியே சென்றால் எங்களது வாழ்வதாரம் மிகவும் பாதிக்கபடும் ஆகவே செல்போன் டவரை அகற்றி வேறு பகுதிக்கு நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
