மாஸ்க் இல்லாம வர்றாங்க.. கதறும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள்

193
Spread the love

தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளா்கள் சங்கத்தினா் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு…..  பெட்ரோலியம் விற்பனை அத்தியாவசிய தேவைகள் பட்டியலில் வருவதால் தற்போது 24 மணி நேரமும் குறைந்த ஊழியா்களை கொண்டு செயல்படுத்தி வருகிறோம். தற்போதைய சூழலில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டுப்பாடின்றி, உாிய பாதுகாப்பின்றி (மாஸ்க் இல்லாமல்) பெட்ரோல் நிரப்ப வருகின்றனா். அவா்களின் அஜாக்கிரதை போக்கினால் நோய் தொற்று பரவுவதை தடுத்திடவும், எங்கள் ஊழியா்களின் நலன் கருதியும், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் விற்பனை செய்ய கட்டுப்பாடு விதித்திட வேண்டுகிறோம் என்று முதல்வருக்கு அந்த செய்தி குறிப்பில் வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது

LEAVE A REPLY