திருச்சி புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் ( வயது24) மருந்தக விற்பனையாளராக வேலை செய்து வருகிறார் கடந்த 5 ந்தேதி இவர் புத்தூர் களத்து மேடு அருகே தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அவரை கத்தியால் குத்தி உள்ளனர் மேலும் தடுக்க வந்த வினோத்தின் தங்கையையும் கீழே தள்ளி விட்டார்கள் இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீஸ் வழக்குப்பதிந்து புத்தூர் பகுதியைச் சேர்ந்த சாலமன் ஜோசப் (29), சரண் (19), அருண் பிரசாத் (21)மற்றும் யுவராஜ் ( 24) ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் தப்பி ஓடிய பாரதி, சதீஷ், அரவிந்தன், குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.
வெவ்வேறு சம்பவங்களில் .. திருச்சி கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் எதிரே தனியார் பொறியியல் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர் அப்போது சந்தேகிக்கும் வகையில் நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர் இதில் அவர் ராம்ஜி நகர் மில் காலனியைச் சேர்ந்த அகிலன் (வயது31)என்பதும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து ரூபாய் ஐந்தாயிரம் மதிப்புள்ள 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போன்று
திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலை பாரதியார் சாலை அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தி கஞ்சா மற்றும் மனநலம் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய போதை மருந்துகளை விற்ற திருச்சி பெரிய செட்டி தெருவை சேர்ந்த பரத்குமார் (வயது34) மற்றும் திருச்சி புதுக்கோட்டை சாலையை சேர்ந்த சம்பூ சிங் (வயது41) ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்து விசாரணை
நடத்திஅவர்களிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா மற்றும் 30 கிராம் மதிப்புள்ள போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.