தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உடன் பிறந்த மூத்த சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன். இவர் தென்சென்னை எம்.பியாக இருக்கிறார்.
தமிழச்சி தங்கபாண்டியனின் பிறந்தநாளையொட்டி அவரது தம்பியும், அமைச்சருமான தங்கம் தென்னரசு அக்காவுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
தாய்க்கு நிகரான பேரன்பும், தந்தைக்கு நிகரான கருணையும் கொண்டு, தலைமகளாக நின்று வழி நடத்தும் என் அன்பு அக்கா, தமிழச்சிக்கு என் இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் .
உனது அன்பு மக்களுக்கானதாகட்டும். உனது பொதுவாழ்வு இம்மண்ணுக்கானதாகட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த பழையபடம் சமூகவலைதளத்தில் டிரெண்டிங் ஆகி உள்ளது.