அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் முகமது முபாரக்

அடிவாரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது நகர மன்ற உறுப்பினர்களின் பெயர்களை கூறி அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அதற்கு கட்சி நிர்வாகிகளின் பெயர்களை மட்டும் தெரிவித்தால் போதும் என சிலர் கூறியதால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே பிரச்சார வேனில் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கடும் வெயில் காரணமாக சோர்ந்தபடி காணப்பட்டார். அவர் பிரச்சார வாகனத்தின் பின்புறம் அமர்ந்த நிலையிலேயே உறங்கியபடி வந்தது, கூட்டணி கட்சியினர் இடையே சுணக்கத்தை ஏற்படுத்தியது.