புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில், மூகாம்பிகை லியோ கிளப் சார்பில் 100 மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில், விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துவதில், இரத்ததானம் வழங்குவதில், மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்துவதில், இயலாதவர்களுக்கு இலவசமாக உணவு வழங்குவதில், மரக்கன்றுகளை நடுவதில், முன்னோடியாகவும், முன்மாதிரியாகவும் இருக்கும் லியோ கிளப், அதன் ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தலைவர், செயலர், பொருளாளர் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியினை லியோ சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதிப்புறு முனைவர் மணிகண்டன் ஒருங்கிணைத்தார்
லியோ கிளப் சார்பில் மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் மரக்கன்று நடல்

