Skip to content

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி”… அரியலூர் கலெக்டர், எஸ்பி தலைமையில் ஏற்பு…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (07.02.2025) எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 07.02.2025 இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளரகள் முத்தமிழ்ச்செல்வன்,(தலைமையிடம்) மற்றும் விஜயராகவன் (மதுவிலக்கு அமல் பிரிவு) முன்னிலையில் கொத்தடிமை தொழிலாளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி, கொத்தடிமை தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்வுக்காக பணியாற்றுவேன் என்றும், கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என்றும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மேலும்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி, மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல் நிலையங்களிலும் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி கடைபிடிக்கப்பட்டது

error: Content is protected !!