Skip to content

பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (80) உடல்நலக்குறைவால் கேரளாவின் திருச்சூரில் நேற்று காலமானார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 16,000க்கும் அதிகமான பாடல்களை அவர் பாடி உள்ளார்.

இவர் இந்திய தேசிய திரைப்பட விருதை ஒருமுறையும், தமிழக அரசின் மாநில திரைப்பட விருதை நான்கு முறையும், கேரள மாநில திரைப்பட விருதை நான்கு முறையும் பெற்றவர்.

1997ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். தமிழில் புதுமைப் பெண்,  மூன்று முடிச்சு,  வைதேகி காத்திருந்தாள், சம்சாரம் அது மின்சாரம், அம்மன் கோவில் கிழக்காலே, கிழக்குச் சீமையிலே, பூவே உனக்காக, சுந்தரா டிராவல்ஸ், கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார். அவரது மறைவிற்கு  பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து  உள்ளனர்.   மோடியின் இரங்கல் செய்தியில், ஜெயச்சந்திரன் மறைவால் வேதனை அடைந்தேன். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் உள்ளன என பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!