Skip to content

ஸ்டாலினிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தினமும் இடைவிடாது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிலையில் அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ  மருத்துவமனையில்  உடல் பரிசோதனைக்கு சென்றார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் 3 நாள் கட்டாயமாக ஓய்வு எடுக்க வேண்டும்.  அப்போது அவருக்கு  சில மருத்துவ பரிசோதனைகளும் செய்ப்படும் என்ற தெரிவித்தனர்.  எனவே அவர் 3 நாள் மருத்துவமனையில் இருப்பார்.

முதல்வருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அறிந்த பிரதமர்  மோடி  தொலைபேசியில் துணை முதல்வா் உதயநிதியை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் நலம் விசாரித்தனர்.  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருவாரூர்  கூட்டத்தில் பேசும்போது, முதல்வர் ஸ்டாலின் நலம் பெற பிரார்த்தனை செய்வதாக கூறினார்.

error: Content is protected !!