Skip to content

நாடாளுமன்ற கூட்டம், வெற்றி கொண்டாட்டம்: பிரதமர் மோடி பேட்டி

  • by Authour

இந்திய நாடாளுமன்ற மழைகால  கூட்டத்தொடர் இன்று கூடியது.  ஒவ்வொரு கூட்டத் ெதோடர் தொடஙகும்போதும்,  பிரதமர் மோடி பத்திரிகையாளர்களை சந்திப்பது வழக்கம் அதன்படி இன்று  கூட்டம்  தொடங்குவதற்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:

இந்த நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வெற்றி கொண்டாட்டம் போன்றது. இந்திய ராணுவத்தின் வலிமையை உலகம் பார்த்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவம் நிர்ணயித்த இலக்குகள் 100 சதவீதம் வெற்றியடைந்துவிட்டன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பயங்கரவாதிகளின் வீடுகள் 22 நிமிடத்தில் தரைமட்டமாக்கப்பட்டன.

இந்திய ராணுவத்தின் வலிமையை கண்டு உலக நாடுகள் வியந்தன. உலக நாடுகளின் தலைவர்களை நான் சந்திக்கும்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ ஆயுதங்கள் தங்களை ஈர்ப்பதாக கூறுகின்றனர். இந்தியாவில் ஆயுத உற்பத்தி அதிகரித்து வருகிறது. இந்திய தேசியக்கொடி சர்வதேச விண்வெளி நிலையத்தில் பறக்கவிட்டப்பட்டது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. அனைத்து எம்.பி.க்களும், நாட்டு மக்களும் ஒரே குரலில் இந்த சாதனையைப் போற்றுவார்கள். நமது எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு இது ஊக்கமாக இருக்கும்.

நாட்டில் உள்ள நக்சலைட்டுகள் முழுவதும் ஒழிக்கப்படுவார்கள். நக்சலைட்டுகளின் எண்ணிக்கை அதிவேகமாக குறைந்து வருகிறது. நக்சலைட்டுகள் பிடியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மீட்கப்பட்டுள்ளன. நக்சலைட்டுகள் பாதிப்பு இருந்த மாவட்டங்கள் தற்போது வளர்ச்சியை நோக்கி பயணிக்கின்றன. உலகின் 3வது பெரிய பொருளாதாரம் என்ற நிலையயை இந்தியா விரைவில் எட்டும். நாட்டில் பண வீக்கம் குறைந்து வளர்ச்சி அதிகரித்துள்ளது. உலகின் நிதிசார்ந்த தொழில்நுட்பத்தில் யுபிஐ பணப்பரிவர்த்தனை முறை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

error: Content is protected !!