பீகாாில் இன்னும் 2 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் சென்றார். அங்குள்ள கயாஜியில் ரூ.13,000 கோடியில் பல்வேறு பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கங்கை நதியின் மேல் ரூ.1,870 கோடியில் கட்டப்பட்ட 6 வழிச்சாலை மேம்பாலத்தை மோடி திறந்து வைத்தார். வடக்கு பீகார் -தெற்கு பீகார் இடையே 100 கி.மீ. தூரத்தை குறைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டது. ரூ.1,900 கோடியில் பக்தியபூர்-மொகாமா இடையே 4 வழிச்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
பீகாரில் ரூ.6,880 கோடியில் 660 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் பக்சர் அணுமின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது: ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கு பீகார் ப மக்கள் வாக்கு வங்கிகள் மட்டுமே. ஆர்ஜேடி ஆட்சிகாலத்தில் இந்த பகுதி பயங்கரவாதத்தின் பிடியில் இருந்தது. கயாஜி போன்ற நகரங்கள் இருளில் மூழ்கியிருந்தன; கல்வி, வேலைவாய்ப்புக்கு மக்கள் இடம்பெயர்ந்தனர். பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் அழிக்கப்படுவர் என பீகார் மண்ணிலிருந்து கூறினேன். பீகார் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட தீர்மானம் நிறைவேறியதை இன்று உலகம் பார்க்கிறது
இந்திய பாதுகாப்புக் கொள்கையில் ஆபரேஷன் சிந்தூர் ஒரு புதிய கோட்டை வரைந்துள்ளது. பயங்கரவாதிகள் எவ்வளவு ஆழமாக மறைந்திருந்தாலும், இந்திய ஏவுகணைகள் அவர்களை அழிக்கும். புதிய மசோதாக்களை சிலர் எதிர்க்கிறார்கள். பதவி பறிக்காமல் எப்படி ஊழரை ஒழிக்கமுடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.