Skip to content

பாமக நிர்வாகி வெட்டிக்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் இளந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஏ.வாசு. இவர் பாமக செங்கல்பட்டு மத்திய மாவட்ட துணை செயலாளராக செயல்பட்டு வந்தார். மேலும், இவர் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் ஆவார். செங்கல்பட்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு கேட்டரிக், குடிநீர் சப்ளை  தொழில்களில்  ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இளந்தோப்பு பகுதியில் லாரியில் இன்று தண்ணீர் நிரப்ப வாசு வந்துள்ளார். அப்போது அவரை மர்ம கும்பல் வெட்டிக்கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளது.

இந்த கொலை குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று வாசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

error: Content is protected !!