Skip to content

பா.ம.க. மா. செயலாளர் ஜெயராஜ் கைது கண்டிக்கத்தக்கது …அன்புமணி ராமதாஸ்…

அறவழியில் போராட்டம் நடத்திய விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயராஜ் காவல்துறையால் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாமக கௌரவ தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், திண்டிவனத்தில் அறவழியில் போராட்டம் நடத்திய விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயராஜ், தலைவர் பாவாடைராயன் உள்ளிட்ட நால்வரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆண் காவலர்கள் தாக்கியதில் 3 பெண்கள் காயமடைந்துள்ளனர். காவல்துறையினர் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை காவல்துறை மதிக்க வேண்டும். அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடக்கூடாது. கைது செய்யப்பட்ட பா.ம.க. நிர்வாகிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
error: Content is protected !!